search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசாத் ஷபிக்"

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
    கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த நிலையில், தென்ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.

    பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.


    பாபர் ஆசம்

    254 ரன்களை தாண்டியதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. தற்போது 40 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.


    ரபாடா

    பாகிஸ்தான் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கும்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 272 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் 139 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று 9 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126 ரன்னுடன் களத்தில் இருந்தார்.


    கேன் வில்லியம்சன் - நிக்கோல்ஸ்

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சுமார் 81 ஓவர்கள் இன்று விளையாட வேண்டும். கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்தால் டிரா செய்யலாம்.

    பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றால் நியூசிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் பாகிஸ்தான் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து தொடரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கேப்டன் கேன் வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து 104 ஓவர்கள் விளையாடி 272 ரன்கள் சேர்த்துள்ளது.



    தற்போது வரை 198 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கூடுதலாக 100 ரன்களுக்கு மேல் அடித்து 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் நியூசிலாந்து போட்டியை டிரா செய்யும், அல்லது வெற்றி பெறும். சதம் அடித்த கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த பாகிஸ்தான் கனவை தகர்த்துள்ளார்.

    முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


    சதாப் கான்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
    ×